இந்தியா

மாயாவதியை அவதூறாகப் பேசிய வழக்கு: பாஜக முன்னாள் தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை

பகுஜன் சமாஜ் க ட்சித் தலைவர் மாயாவதியை அவதூறாகப் பேசிய வழக்கில் உத்தரபிரதேச மாநில பாஜக முன்னாள் துணைத்தலைவர் தயா சங்கர் சிங்குக்கு ஜாமீனில் வெளிவர ,முடியாத பிடியாணை பிறப்பித்து லக்னோ நகர நீதிமன்றம் ஒன்று உத்தரவிடட்டுள்ளது.

IANS

பகுஜன் சமாஜ் க ட்சித்  தலைவர் மாயாவதியை அவதூறாகப் பேசிய வழக்கில் உத்தரபிரதேச மாநில பாஜக முன்னாள் துணைத்தலைவர் தயா சங்கர்  சிங்குக்கு ஜாமீனில் வெளிவர ,முடியாத பிடியாணை பிறப்பித்து  லக்னோ நகர நீதிமன்றம் ஒன்று உத்தரவிடட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநில பாஜக துணைத்தலைவராக இருந்தவர் தயா சங்கர்  சிங். இவர் கடந்த வாரம் மாவ் என்ற இடத்தில்கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது, பகுஜன் சமாஜ் க ட்சித்  தலைவர் மாயாவதி தேர்தலில் போட்டியிட சீட் அளிக்கும் முறையை விமர்சித்துப்பேசினார். அப்பொழுது அவர் மாயாவதியை 'பாலியல் தொழிலாளி' என்னும் பொருள்பட விமர்சித்துப் பேசினார். இது பகுஜன் சமாஜ் க ட்சித் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. தயா சங்கருக்கு எதிராக , பகுஜன் சமாஜ் தேசிய செயலாளர் மேவலால் கவுதம், ஹஸ்ரத்கஞ் ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார்.பாஜக மேலிடம் அவர் மீது நடவடிகை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கியது.

இந்நிலையில் லக்னோ நகர நீதிமன்றம் ஒன்று தயா சங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத பிடியாணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லக்னோ காவல்துறை கண்காணிப்பாளர் மஞ்சில் சைனி கூறியதாவது:

தயா சங்கரை விரைவில் கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாநில காவல்துறை மாவ் , பாலிலா, கோரக்பூர், மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது.  அவர் கிடைக்கவில்லை. அநேகமாக அவர் டெல்லியில் மறைந்திருக்கலாம். ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் சரணடையும் திட்டம் கூட இருக்கலாம்.

இவாறு சைனி தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT