இந்தியா

இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் - ஆங் சான் சூகி சந்திப்பு!

லாவோஸின் தலைநகர் வியன்டைனில் இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், மியான்மர் நாட்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரான ஆங் சான் சூகியை சந்தித்து பேசினார்

IANS

லாவோஸின் தலைநகர் வியன்டைனில்  இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், மியான்மர் நாட்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரான  ஆங் சான் சூகியை சந்தித்து பேசினார்.

கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் ஆறாவது மாநாடு லாவோஸ்  தலைநகர் வியன்டைனில்  நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், அங்கே மியான்மர் நாட்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரான  ஆங் சான் சூகியை சந்தித்தார்.

இது தொடர்பாக அவர்கள் இருவரும்  சந்தித்துக் கொள்ளும் புகைப்படத்தை வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது டிவிட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக திங்களன்று வியன்டைனில் நடைபெற்ற ஆசியான் நாடுகளின்  வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டிலும் வி.கே.சிங் கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT