இந்தியா

கோவா மாநில கடற்கரைகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா: சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல் !

கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளை கண்காணிக்க விரிவான சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும் என மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் திலீப் பாருலேக்கர் தெரிவித்துள்ளார்.

IANS

கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளை கண்காணிக்க விரிவான சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும் என மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் திலீப் பாருலேக்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவா மாநில சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய் எழுப்பியிருந்த கேள்விக்கு, பாருலேக்கர் எழுத்துப்பூர்வமாக அளித்திருந்த பதில் பின்வருமாறு:

கோவா மாநில கடற்கரைகளை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் விரிவான சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்த ரூ 3.61 கோடி ஒதுக்கபப்ட்டுள்ளது.

மேலும் கோவா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மாநில கடற்கரைகளை முழுமையான மின்னணு கண்காணிப்பு முறைக்கு கொண்டு வர திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. அந்த திட்டம்  சுற்றுலா அமைச்சகத்தின் "ஸ்வதேஷ் தர்ஷன்" திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சிசிடிவி கேமராக்கள் நிறுவுதல், கடற்கரைகளில் இலவச வைஃபை வசதி மற்றும் கண்காணிப்பு மையங்கள் ஆகியவை உண்டாக்காப்படும்.

மேலும்  மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 'கோவா எலெக்ட்ரானிகிஸ் லிமிடட் ' இந்த திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பாகா, கலங்கூட், கண்டோலிம், வகடோர் மற்றும் அஞ்சுனா ஆகிய கடற்கரைகளில் முதல்கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

கண்காணிப்பு மைங்கள் சுற்றுலாத்துறை அலுவலகங்களிலும், காவல் நிலையங்களிலும் செயல்படும்

இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT