இந்தியா

தானேயில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 8 பேர் பலி!

மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் பழைய இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

IANS

மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் பழைய இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இன்று காலை  இடிந்து விழுந்து விபத்துக்குளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரில் உள்ளது கைப்நகர் பகுதி. விசைத்தறி தொழிற்கூடங்களுக்கு மிகவும் புகழ்பெற்ற பகுதி யாகும். இங்கு அமைந்துள்ள பழமையான இரண்டு மாடிகட்டிடம் ஒன்று இன்று காலை 8.30 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில்  8 பேர் பலியானார்கள்.

சம்பவம் குறித்து தகவல் கேள்விப்பட்ட உடன் பேரிடர் மேலாண்மை அணியினர், மாவட்ட தீயணைப்புத்துறை துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறையைச் சார்ந்த அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் மஹாராஷ்டிரா மாநில கடற்கரை பகுதிகள் முழுவதும் சனிக்கிழமை மாலை முதல் தொடர்ந்த பெய்து வரும் மழையின் காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னரே  நகராட்சி நிர்வாகம் சார்பில்,  அந்த  கட்டிடத்தை அபாயமான கட்டிடம் என்றுஅறிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தது என்றும், அதையும் மீறி அங்கே  மக்கள் தனகியிருந்தனர் என்று உள்ளூர்வாசிகள்   தெரிவித்தனர் .

இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது

இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 22 பேர் அந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப் பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு  பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT