இந்தியா

பாப்பா நீ எப்படி பர்ஸ்ட் மார்க் வாங்குனே! வந்து மறுபடியும் பரீட்சை எழுது- பிகார் வினோதம்

பிகார் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்றவர்கள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் அதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

PTI

பாட்னா: பிகார் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்றவர்கள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் அதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத் தேர்வு என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அந்த படம். ஆம், பரீட்சை எழுதும் மகன், சகோதரன் மற்றும் சொந்தகாரர்களுக்காக ஒரு ஊரே திரண்டு வந்து ஜன்னல் வழியே 'பிட்டு' விநியோகம் செய்ததுதான்.

இந்நிலையில் பிகார் மாநில பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. முதலிடம் பெற்ற மாணவர்களை பேட்டி எடுக்க சென்ற போதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

கலைப் பிரிவில் முதலிடம் பெற்றிருந்த ரூபி ராய் என்ற பெண்ணை ஊடகத்தினர் பேட்டி எடுத்தப் போது, அவருக்கு மொத்தம் எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது என்றே தெரியவில்லை. அவர் 500க்கு 444 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்ற நிலையில், மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியதாகக் கூறினார்.

மேலும் தான் பயின்ற 'பொலிட்டிக்கல் சயின்ஸ்'  பாடத்தை 'ப்ரோடிகல் சயின்ஸ்' என்றும் கூறியுள்ளார். தான் படித்த பாடத்தையே சரியாக உச்சரிக்கத் தெரியாத மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்றது குறித்த 'விடியோ' `வைரலாக' பரவ, பிகார் மாநில கல்வி அதிகாரிகள் திகைத்தனர்.

இதைவிட அறிவியல் பிரிவில் முதல் இடம் பிடித்த மாணவர் சௌராப் குமார் நிலைமை மிகவும் மோசம். முதலிடம் பிடித்த அவருக்கு புரோட்டான், எலக்ட்ரான் என்பது குறித்து எல்லாம் ஒன்றுமே தெரியவில்லை.

இதில் பெரிய சுவாரசியம் என்னவென்றால் கலை மற்றும் அறிவியல் பிரிவில் முதலிடம் பெற்ற இருவரும் ஒரே வைசாலி மாவட்டத்தில் உள்ள பகவான்புர் நகரில் உள்ள பிஸுன் ராய் கல்லூரியில் பயின்றவர்கள்.

கடந்த காலங்களில் இக்கல்லூரியில் முறைகேடுகள் நடைபெற்ற நிலையில், அப்போதைய கல்வி அமைச்சர் பி.கே.ஷாகியத் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அதே கல்லூரியில் பயின்ற மாணவர்கள் முதலிடம் பிடித்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிகார் மாநிலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாநிலக் கல்வி அமைச்சர் அசோக் சௌத்ரி கூறியுள்ளார்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களிடம், கல்வி நிபுணர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்துவார்கள். விசாரணையில் முடிவில் தவறு செய்த கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சௌத்ரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT