ஹிமாச்சல சாலை போக்குவரத்து ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம்
ஹிமாசல மாநில சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று இரவு முதல் ஈடுபட உள்ளனர்.
சிம்லா: ஹிமாசல மாநில சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று இரவு முதல் ஈடுபட உள்ளனர்.
8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஒப்பந்த ஊழியர்களை, நிரந்திர ஊழியர்களாக மாற்றுதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
ஹிமாச்சல சாலை போக்குவரத்துக்கழகத்துக்கு உட்பட்ட 2,500-க்கு மேற்பட்ட பேருந்துகள் மாநிலத்துக்கு வெளியே இயக்கப்பட்டு வருகின்றது. இதை நிறுத்தக் கோரி கண்டித்தும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
Advertisement
மேலும், இந்த போராட்டத்துக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.எஸ் பாலிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.