முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்ம ராவின் 95-வது பிறந்தநாள்: மோடி டிவிட்டரில் அஞ்சலி
பி.வி நரசிம்ம ராவின் 95-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
புது தில்லி: பி.வி நரசிம்ம ராவின் 95-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
டிவிட்டரில் அவர் கூறியதாவது,
முன்னாள் பிரதமர் ஸ்ரீ நரசிம்ம ராவின் பிறந்தநாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தி தலைவணங்குகிறேன். 1991 முதல் 1996 வரை பிரதமராக பதவி வகித்தார். அவரது தலையிலான ஆட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
Advertisement
நாட்டில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடக்கி வைத்து, நெருக்கடியான நேரத்தில் நாட்டை வழிநடத்தியவர். கொள்கை ரீதியிலான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, ஏராளமான அறிக்கைகள் தாக்கல் செய்தவர். துணிச்சலுடன் முடிவுகளை எடுப்பவர் நரசிம்ம ராவ் என்று மோடி கூறியுள்ளார்.