இந்தியா

மும்பையில் உள்ள மருந்து கடையில் தீ விபத்து: 8 பேர் பலி

மும்பையில் அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

IANS

மும்பை: மும்பையில் அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அந்தேரி பகுதியில் இன்று காலை 6.15 மணியளவில் மருந்து கடையில் திடீரென ஏற்பட்ட  தீ விபத்தால், கடை முழுவதும் தீ மளமளவென பரவியது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இரண்டு பேர் படு காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT