இந்தியா

தேச விரோத முழக்கத்துக்கும் கன்னையாவுக்கும் தொடர்பில்லை: தில்லி ஆட்சியர் அறிக்கை

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேச விரோத முழக்கத்துக்கும், மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையாவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று தில்லி அரசிடம், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்.

IANS

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேச விரோத முழக்கத்துக்கும், மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையாவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று தில்லி அரசிடம், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் கூறியிருப்பதாவது, புதன்கிழமை இரவு தில்லி அரசிடம் எனது அறிக்கையை சமர்ப்பித்தேன் என்று கூறியுள்ளார். எனினும், அறிக்கையில் கூறியிருப்பது குறித்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இது குறித்து பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்கள் கூட்டத்தில் பேசிய கன்னையாவுக்கும், தேச விரோத முழக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பல்கலை வளாகத்துக்குள் தேச விரோத முழக்கம் எழுப்பப்பட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜேஎன்யு விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தில்லி மாவட்ட ஆட்சியருக்கு, மாநில அரசு கடந்த பிப்ரவரி 13ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் கைது செய்யப்பட்ட கன்னையாவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT