முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம், கேரளாவில் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை: கன்னையா குமார்

நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில தேர்தல்களில் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட

Updated On : 9 மார்ச், 2016 at 5:25 PM
பகிர்:

தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ள தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில தேர்தல்களில் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்று கூறினார்.

இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:

நான் ஏற்கெனவே குறிப்பிட்டப்படி முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. தற்போது நான் மாணவராக இருக்கிறேன். என்னுடைய ஆராய்ச்சி படிப்புக்குப் பின் ஆசிரியராகவே விரும்புகிறேன். அதுவரை நாட்டில் நிலவும் முக்கியமான விவகாரங்களுக்காக போராடவே விரும்புகிறேன்.

Advertisement

என்னுடைய இரு நண்பர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை. ரோஹித் வேமூலா விவகாரம் முதல் அலகாபாத் பல்கலைக்கழக விவகாரம் வரை நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். மாணவர்களுக்காக பல்வேறு பிரச்னைகளில் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதனால், நடைபெறவிருக்கும் தேர்தல்களில் பிரசாரத்துக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்க்கை அனுமதி கிடைப்பது எவ்வளவு அரிதானது என்பது நாட்டில் உள்ள மக்கள் அனைவருமே அறிவர். இங்குள்ள மாணவர்கள் படிக்காமல் போராட்டம் நடத்தி வருவதாக கூறுவது தவறானது. 'படிப்போம்-போராடுவோம்'  என்பதே எங்களது பிரதான நோக்கமாகும். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் அறிவார்ந்த மாணவர்களின் செயல்பாடுகளை கண்டு அஞ்சுவோரே நாங்கள் அரசியல் செய்வதாக கூறுகின்றனர்.

இலவசமாக விளம்பரம் தேடுவதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுவது குறித்து பேசிய கன்னையா குமார், அமைச்சர் நாயுடுவும் ஆரம்பகாலத்தில் ஏபிவிபி சார்பில் ஆந்திர பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.