இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 21 லட்சம்: உலக அளவில் 3ம் இடம்
இந்தியாவில் எய்ஸ்ட் எனப்படும் எச்ஐவி கிருமி பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் என்றும், உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டுக்கான எச்ஐவி மதிப்பீட்டு அறிக்கையின் படி, இந்தியாவில் 21.17 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.
உலக அளவில், எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. தென் ஆப்பரிக்கா 68 எய்ட்ஸ் நோயாளிகளுடன் முதல் இடத்திலும், நைஜீரியா 34 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.
Advertisement