இந்தியா

பெட்ரோல் ரூ.3.07, டீசல் ரூ.1.90 விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.07ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.90ம் உயர்த்தப்பட்டுள்ளன.

PTI

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.07ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.90ம் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணெய் விலை நேற்றைய (மார்ச் 15) நிலவரப்படி பீப்பாய் ஒன்றுக்கு ரூ. 2381.35 ஆக இருந்தது.

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.02 குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் டீசல் விலை ரூ.1.47 உயர்த்தப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாதந்தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

SCROLL FOR NEXT