தேசத் துரோக வழக்கு: ஜேஎன்யு மாணவர்கள் இரண்டு பேருக்கு ஜாமீன்
தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோருக்கு தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோருக்கு தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார், உமர் காலித் மற்றும் அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோர் தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
கன்னையா குமார் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், உமர் மற்றும் பட்டாச்சார்யாவின் ஜாமீன் மனுக்களை இன்று விசாரித்த தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, இருவருக்கும் ஆறு மாத கால ஜாமீன் வழங்கி, இருவரும் தலா ரூ.25,000 பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.