முகப்பு
இந்தியா

போபாலில் ஏரிக்கு நடுவில் மது விருந்து: படகு தள்ளாடியதில் 5 இளைஞர்கள் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே, ஏரிக்கு நடுவே படகில் இளைஞர்கள் மது விருந்து நடத்தியதில், படகுக் கவிழ்ந்து 5 பேர் பலியாகினர்.

Updated On : 21 மார்ச், 2016 at 2:53 PM
பகிர்:

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே, ஏரிக்கு நடுவே படகில் இளைஞர்கள் மது விருந்து நடத்தியதில், படகுக் கவிழ்ந்து 5 பேர் பலியாகினர்.

நேற்று இரவு, போபாலில் லோயர் லேக் என்ற ஏரிக்குச் சென்ற 10 இளைஞர்கள், படகு ஒன்றைப் பிடித்து அதில் மது விருந்து நடத்தியுள்ளனர்.

மது போதை தலைக்கேறியதில், ஒரு இளைஞர், படகில் எழுந்து நின்று நடனமாடியதில், படகு தள்ளாடி, கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 5 இளைஞர்கள் ஏரியில் மூழ்கி பலியானதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்ற 5 இளைஞர்களும் பத்திரமாக கரைசேர்ந்துள்ளனர்.

Advertisement

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.