இந்தியா

நாளை பிரஸ்ஸெல்ஸ் புறப்படுகிறார் நரேந்திர மோடி

கடந்த வாரம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை செல்கிறார்.

PTI

புது தில்லி: கடந்த வாரம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை செல்கிறார்.

மூன்று நாடுகள் பயணத்தின் தொடக்கமாக, முதலில் பிரஸ்ஸெல்ஸ் செல்லும் பிரதமர் மோடி, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேலை சந்தித்துப் பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அதில், இரு நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்ததகம் தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. பிரஸ்ஸெல்ஸில், வைர வியாபாரிகள் உள்ளிட்ட தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். பின்னர் அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றுகிறார். இதுதவிர, அறிஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.

அதைத் தொடர்ந்து, வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடி, அங்கு வரும் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 4ஆவது அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில், அணுசக்தி பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

அதைத் தொடர்ந்து, 2 நாள் பயணமாக, பிரமதர் மோடி, ஏப்ரல் 2-ஆம் தேதி சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார். தலைநகர் ரியாத்தில் அந்நாட்டு அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல்-சவூதை மோடி சந்தித்துப் பேசவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - இபிஎஸ் அறிவிப்பு

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

திமுகவிடம் 41 தொகுதிகள் கோரும் காங்கிரஸ்!

மாசித் திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் காமாட்சி அம்மன்!

கடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

SCROLL FOR NEXT