மால்டா: மேற்கு வங்கம், மால்டா மாவட்டத்தில் ஜாய்ன்பூர் கிராமத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு சரியாக நேற்றிரவு 11.30 நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிந்த 4 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமையன்று மேற்கு வங்கத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிகழ்ந்தது. அதில் 78.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவன்று வன்முறையில் ஈடுபட்ட 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு நடந்த இச்சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.