சில்கூர்: உத்தரகண்ட் மாநிலம் சில்கூர் தேவ்தா கோயிலில் பாஜக எம்.பி தருண் விஜய் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சில்கூரில் உள்ள தேவ்தா கோயிலில் பூஜையில் கலந்து கொள்ள பாஜக எம்.பி. தருண் விஜய் சென்றார். இந்நிலையில் அங்கு இரு பிரிவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி பலத்த காயமுற்றார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் காயடைந்த பாஜக எம்.பி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ப்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.