இந்தியா

பலாத்காரத்துக்கு உள்ளான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி: கேஜ்ரிவால், சோனியா நேரில் சந்தித்து ஆறுதல்

தில்லியில் கடந்த வாரம் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

PTI

புது தில்லி : தில்லியில் கடந்த வாரம் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இன்று காலை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், தில்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தில்லி அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று மதியம் சோனியா காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோர் இல்லாத நிலையில், தனது உறவினர் இல்லத்தில் வசித்து வந்ததாகவும், அவர் கடந்த 17ம் தேதி காணாமல் போன நிலையில், 18ம் தேதி காலை  ரயில் தண்டவாளத்துக்கு அருகே மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

SCROLL FOR NEXT