இந்தியா

தமிழகத்தில் வாய்ப்பு கிடைக்காத ஒருவரை மகாராஷ்டிரத்தில் களமிறக்குவதா? சிவசேனை கண்டனம்

மகாராஷ்டிர மாநிலத்தில் காலியாகவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்பாளராகக் களமிறக்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

PTI

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் காலியாகவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்பாளராகக் களமிறக்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வாய்ப்பு கிடைக்காத ஒருவரை மகாராஷ்டிரத்தில் களமிறக்குவதா? என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து சிவசேனையின் பத்திரிகையான சாம்னாவில் வெளியான கட்டுரையில், மாநிலங்களவைத் தேர்தலில் யாரை முன்னிறுத்துவது என்பது காங்கிரஸ் கட்சியின் சொந்த விவகாரம். ஆனால், தமிழகத்தில் வாய்ப்பு கிடைக்காத ப.சிதம்பரத்தை மகாராஷ்டிரத்தில் களமிறக்கியதன் மூலம் அக்கட்சி பாவம் செய்துள்ளது.

எல்லாவற்றையும் கவனிக்கும்போது, மகாராஷ்டிரத்தில் சிதம்பரத்தை முன்னிறுத்தியதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனது பெயரை கெடுத்துக் கொண்டுள்ளது தெளிவாகிறது என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

SCROLL FOR NEXT