மாஸ்கோ (ரஷ்யா): ரஷ்ய நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்படும் 4 மற்றும் 5-வது அணு உலைகளுக்கான செயல் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
இந்தியாவில் அதி நவீன 12 அணு உலைகளை அமைப்பதற்காக இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 6 அணு உலைகள் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. இதில் முதல் இரு அணு உலைகள் ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில், இரண்டாம் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.
மேலும், 4 மற்றும் 5-வது அணு உலைகளுக்கான செயல் ஒப்பந்தம் இந்த ஆண்டுக்குள் கையெழுத்தாகும் என கூடங்குளத்தில் அணு உலைகளை நிறுவி வரும் ஏ.எஸ்.இ. என்ற ரஷ்ய நிறுவனத்தின் தலைவர் வேலரி லிம்ரன்கோ கூறினார்.
இந்தியாவிலிருந்து ரஷ்யா சென்றுள்ள செய்தியாளர்கள் குழுவிடம் பேசிய அவர் இதை தெரிவித்தார்.
மேலும், இந்திய அரசு தெரிவிக்கும் இடத்தில் மேலும் 6 அணு உலைகள் அமைக்கப்படும் என ரஷ்ய அரசின் அணுசக்தி துறை இயக்குநர் விளாதிமிர் ஏ ஏஞ்சலோ கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.