இந்தியா

போபால் போலி என்கவுண்டரில் தொடர்புடைய எல்லாரையும் தூக்குல போடுங்க: கொந்தளித்த முன்னாள் நீதிபதி கட்ஜூ! 

DIN

புதுதில்லி: போபாலில் சிறையில் இருந்து தப்பித்த 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட என்கவுண்ட்டர் போலி என்றும், இதில் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையில் சிறைக் காவலரை கொன்றுவிட்டு 8 சிமி தீவிரவாதிகள் நேற்று அதிகாலை தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. பின்னர் தப்பிய அனைவரும் நேற்று மாலை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக காவல்துறை அறிவித்தது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தன்னுடைய சமூக  வலைத்தள பக்கத்தில், 'எனக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி கண்டிப்பாக இது போலி என்கவுண்ட்டர்தான்.   இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்கு தண்டனை தரப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT