இந்தியா

தில்லி உட்பட 5 மாநிலங்களில் அனல்மின் நிலைய உற்பத்தியை நிறுத்த உத்தரவு

தில்லி உட்பட 5 மாநிலங்களில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களையும் தாற்காலிகமாக மூடுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

PTI


புது தில்லி: தில்லி உட்பட 5 மாநிலங்களில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களையும் தாற்காலிகமாக மூடுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தில்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான மாசு பிரச்னையை கட்டுப்படுத்தும் வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்குமாறும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தில்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காற்று மாசுபாட்டைக் குறைப்பது தொடர்பாக  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து 2 மாதத்துக்கு ஒரு முறை கமிட்டி கூடி  சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT