இந்தியா

ரூபாய் நோட்டு விவகாரம்: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு

பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையின் நிலவரம் குறித்து தில்லியில் உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆய்வு நடத்தினார்.

DIN

பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையின்
நிலவரம் குறித்து தில்லியில் உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆய்வு நடத்தினார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, நாடு முழுவதும் வங்கிகள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றில் போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுகள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொதுமக்கள் சிரமங்கள் ஏதுமின்றி புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, திருமணச் செலவுகளுக்கும், விவசாயிகளுக்கும் சில சலுகைகள் உள்பட 7 புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுனேத்ரா பவாருடன் என்சிபி தலைவர்கள் சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸை இணைக்க அஜித் பவார் விரும்பினாரா? - சரத் பவார் பதில்!

234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை முதல் பரப்புரை!

“எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை” - முதல்வர் மு . க. ஸ்டாலின்!

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

SCROLL FOR NEXT