இந்தியா

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல்: பிரச்சாரத்தை தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா!

வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மணிப்பூரின் "இரும்பு மங்கை' ஐரோம் ஷர்மிளா, தனது தேர்தல் பிரச்சாரத்தை ஞாயிறன்று தொடங்கினார்.     

இம்பால் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மணிப்பூரின் "இரும்பு மங்கை' ஐரோம் ஷர்மிளா, தனது தேர்தல் பிரச்சாரத்தை ஞாயிறன்று தொடங்கினார்.     

மணிப்பூரில் நெடுங்காலமாக அமலிலிருக்கும் மணிப்பூர் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டு காலம் தொடர் உண்ணவிரதமிருந்தவர் ஐரோம் ஷர்மிளா. இதன் காரணமாக மணிப்பூரின் "இரும்பு மங்கை' என்று போற்றப்பட்டவர்.

சமீபத்தில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட அவர் ஜனவரி மாதம் நடைபெற உள்ள மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார்.   இந்நிலையில் அவர் ஞாயிறன்று தனது சொந்த தொகுதியான குராயில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். இந்த தொகுதியில் அவர் காங்கிரசின் பிஜு வை எதிர்த்து போட்டியிடுகிறார்.

அதே நேரத்தில் அவர் தோபல் தொகுதியில் மணிப்பூர் முதல்வர் உக்ரம் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார் 

தனது தேர்தல் பிரசாரத்தின் போது அவர் தான் தேர்தலில் எந்த விதமான பணபலமும் இன்றி போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். ஒரு வேளை தான் இந்த தேர்தலில் தோல்வியடைந்தாலும், 2019-ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT