இந்தியா

பாலமுரளி கிருஷ்ணா மறைவு: இசை கலைஞர்கள் இரங்கல்!

உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த பிரபல கர்நாடக இசை கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா மரணத்திற்கு சக இசை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

DIN

சென்னை: உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த பிரபல கர்நாடக இசை கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா மரணத்திற்கு சக இசை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பின்னணி பாடகி வாணி ஜெயராம்

அவரது மறைவு இசை உலகத்திற்கே பேரிழப்பாகும். அவர் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். தான் என்ற கர்வம் சிறிதும் இல்லாதவர். இந்த உலகமே பார்த்து பிரமிக்கும் இசைக்கலைஞர் ஆவார். 

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம்:

அவரது மறைவு இசை கலைஞர்களுக்கு பேரிழப்பாக்கும். தனது 6 வயதிலேயே மேடை ஏறியவர். இசையுலகில் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தவர்.

இசை கலைஞர் 'வீணை' காயத்ரி:

பாலமுரளி கிருஷ்ணாவின் திடீர் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கர்நாடக சங்கீதத்தில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தவர் அவர்.

பின்னணி பாடகர் 'புஷ்பவனம்' குப்புசாமி:

அவரது குரல் தனித்துவம் வாய்ந்த ஒரு குரல் ஆகும். இளையராஜாவின் இசையில் 'கவிக்குயில்' படத்தில் அவர் பாடிய 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடல் ஒன்றே அவர் திறமைக்கு சான்று.

பின்னணி பாடகர் சீர்காழி சிவ சிதம்பரம்:

தனது மேன்மையான சங்கீதத்தின் மூலம் ஞானம் வழங்கிய மஹா ஞானி அவர். ஈடு செய்ய முடியாத இழப்பு அவருடையது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

SCROLL FOR NEXT