முகப்பு
இந்தியா

பழசுக்கு புதுசு: கமிஷன் அடிப்படையில் பணத்தை கைமாற்றும் கும்பல் ஆந்திராவில் கைது

கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற உதவியதாக ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் உட்பட 10 ஊழியர்கள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Dinamani
Updated On : 24 நவம்பர், 2016 at 6:18 PM
பகிர்:


விசாகப்பட்டினம்: கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற உதவியதாக ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் உட்பட 10 ஊழியர்கள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்எஸ்எம்எஸ் என்ற தனியார் நிறுவனம், ஏடிஎம்களில் பணத்தை நிரப்ப வங்கிகளிடம் இருந்து பெற்ற ரூபாய் நோட்டுகளை, முறைகேடாக, தனி நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கமிஷன் தொகையை பெற்றுக் கொண்டு மாற்றிக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

இந்த தனியார் நிறுவனம்தான், ஏடிஎம்களில் பணத்தை நிரப்புவது மற்றும் ஏடிஎம் மென்பொருள் பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இவர்கள் சுமார் 74 லட்சம் அளவுக்கு முறைகேடாக ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரூபாய் ஒரு கோடியை வங்கி ஏடிஎம்களில் நிரப்ப இவர்களிடம் அளித்தால், அதனை ரூ.25 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொண்டு ரூ.20 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை தனி நபர்களுக்கு வழங்கியுள்ளனர். ஒரு கோடியில் மீதமுள்ள தொகையை மட்டுமே இவர்கள் வங்கி ஏடிஎம்களில் நிரப்பியுள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள விசாகப்பட்டினம் காவல்துறையினர், ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனத்தின் ஓட்டுநர், பணத்தை நிரப்புவோர் என 10 பேரை கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.