முகப்பு
இந்தியா

கருப்புப் பணம் மீண்டும் உருவாவதைத் தடுக்க மோடி தரும் யோசனை

கருப்புப் பணம் மீண்டும் புழக்கத்துக்கு வருவதைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு யோசனை தந்துள்ளார்.

Updated On : 25 நவம்பர், 2016 at 12:59 PM
பகிர்:


புது தில்லி: கருப்புப் பணம் மீண்டும் புழக்கத்துக்கு வருவதைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு யோசனை தந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டால் தான் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளைக் கொண்டு வர முடியும்.

புற்றுநோய் போல கருப்புப் பணம் நாட்டின் பொருளாதாரத்தை அரித்துக் கொண்டிருக்கிறது.

பணப் பரிவர்த்தனைகளை செல்போன்களிலேயே மேற்கொள்ளுங்கள். நாட்டில் உள்ள குடும்பங்களைக் காட்டிலும் செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பணப் பரிவர்த்தனையை மின்னணு முறையில் மாற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சமூகக் கட்டமைப்பும் மிகவும் அவசியம். அரசியல் ஆதாயத்துக்காக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த வில்லை.

ஏழை, எளிய மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தை அனைவரும் வரவேற்க வேண்டும். தொடங்கிய அனைத்துத் திட்டங்களையும் முடிப்பதே மத்திய அரசின் நோக்கம்.

கருப்புப் பணத்திற்கு எதிரான யுத்தத்தில் சாமானியர்களும் பங்கேற்க வேண்டும். ஏழை மக்களுக்கு அனைத்து வசதிகளும் சென்று சேர வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.