முகப்பு
இந்தியா

நூலிழையில் உரசிச் சென்ற இன்டிகோ, கேஎல்எம் போயிங் விமானங்கள்: நடந்தது என்ன?

புது தில்லியில் இன்டிகோ ஏர்பஸ் ஏ320 விமானமும், கேஎல்எம் போயிங் ட்ரீம்லைனர் விமானமும் நூலிழையில் உரசிச் சென்ற சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 26 நவம்பர், 2016 at 10:44 AM
பகிர்:

புது தில்லி: புது தில்லியில் இன்டிகோ ஏர்பஸ் ஏ320 விமானமும், கேஎல்எம் போயிங் ட்ரீம்லைனர் விமானமும் நூலிழையில் உரசிச் சென்ற சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மாத துவக்கத்தில், தில்லியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற இன்டிகோ விமானமும், அமிருதசரஸில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற கேஎல்எம் போயிங் விமானமும் ஒன்றுக்குகொன்று மிக நெருக்கமாக பயணித்துள்ளன. இதனால் மிகப்பெரிய அசம்பாவிதம் நேரிட்டிருக்கும். ஆனால், விமானிகளின் சாதுர்யத்தால், நூலிழையில் இவ்விரு விமானங்களும் உரசிச் சென்றுள்ளன.

எனினும் இது குறித்து விமான விபத்து விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம் நவம்பர் 2ம் தேதி நடந்திருப்பதாகவும், இது மிகவும் மோசமான சம்பவம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.