கேரளாவில் பந்த்: இயல்பு வாழ்க்கை முடக்கம்; ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து கேரளாவில் ஆளும் இடது சாரிக் கூட்டணி அரசு நடத்தி வரும் பந்த் காரணமாக அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்தியாகேரளாவில் பந்த்: இயல்பு வாழ்க்கை முடக்கம்; ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து கேரளாவில் ஆளும் இடது சாரிக் கூட்டணி அரசு நடத்தி வரும் பந்த் காரணமாக அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
திருவனந்தபுரம் : பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து கேரளாவில் ஆளும் இடது சாரிக் கூட்டணி அரசு நடத்தி வரும் பந்த் காரணமாக அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
தனியார் வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுவதால் அலுவலகங்களுக்குச் செல்வோர் பாதிக்கப்பட்டனர். அலுவலகங்களிலும் இன்று குறைவான வருகையே பதிவாகியுள்ளது.
ரூ.500, ரூ1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த விவகாரம் தொடர்பாக வரும் 28ம் தேதி நாடுதழுவிய போராட்டம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு செய்தன.
இதையொட்டி, கேரளாவில் அன்றைய தினம் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த ஆளும் இடதுசாரி கூட்டணி முடிவு செய்து அறிவித்தது.
இதன் காரணமாக இன்று அரசு துறை வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. வங்கிகளிலும் கூட்டம் காணப்படவில்லை. சாலைகளிலும் போக்குவரத்து குறைவாகவே இருந்தது.
கொச்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், இஸ்ரோ மையமும் காவல்துறை பாதுகாப்பின் கீழ் இயங்கி வருகிறது.
கேரள எல்லையில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.