ரூபாய் நோட்டு விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் மோடி பங்கேற்பார்
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடக்கும் விவாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடக்கும் விவாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் இன்று நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ரூபாய் நோட்டு விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவாதத்தின் போது, பிரதமர் மோடி பங்கேற்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.
Advertisement
இந்த நிலையில், இரு அவைகளிலும் நடக்கும் விவாதங்களில் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று பாஜக அறிவித்துள்ளது.