இந்தியா

மதாம் துசோட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் இடம் பிடிக்கும் 'பாகுபலி'!

உலகப் புகழ் பெற்ற லண்டன் மதாம் துசோட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் 'பாகுபலி' கதாபாத்திரத்தின் மெழுகுச்சிலை வரும் 2017ம் ஆண்டில் நிறுவப்பட உள்ளது.

DIN

லண்டன்

உலகப் புகழ் பெற்ற லண்டன் மதாம் துசோட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் 'பாகுபலி' கதாபாத்திரத்தின் மெழுகுச்சிலை வரும் 2017ம் ஆண்டில் நிறுவப்பட உள்ளது.

S .S .ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை  பெற்ற  இந்தபடம், இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையும் படைத்தது.

இந்நிலையில்  'பாகுபலி' படக்குழுவுக்கு மேலும் ஒரு பெருமை கிடைத்திருக்கிறது. லண்டனில் உள்ள உலகப்புகழ் பெற்ற மதாம் துசோட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் 'பாகுபலி' கதாபாத்திரத்தின் மெழுகு சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது.

இது குறித்து மதாம் துசோட்ஸ் அருங்காட்சியக பொது மேலாளர் கூறும் பொழுது, 'இந்தியாவின் முதல் அதிக வசூல் ஈட்டப்பட்ட படம் 'பாகுபலி'. இதன் காரணமாக கூகுள் இணையத்தில் அதிகம் தேடப்படும் நபராக பிரபாஸ் திகழ்கிறார். இதனால் பலரும் அவரின் மெழுகு சிலையை வடிவமைக்க விருப்பம் தெரிவித்தனர்.

எனவே மகாத்மா காந்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்குப் பிறகு பிரபாஸின் 'பாகுபலி' கதாபாத்திரம் இந்தியாவில் இருந்து மெழுகு சிலை பட்டியலில் இடம் பிடிக்கவுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து பிரபாஸ் கருத்து கூறும் பொழுது, ' மதாம் துசோட்ஸ் அருங்காட்சியகம் என்னை தேர்வு செய்தது எனக்கு மிகழ்ச்சி. இதற்கு காரணமாய் இருந்த எனது ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.  எனது குரு ராஜமெளலிக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்' என்று நெகிழ்ந்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT