முகப்பு
இந்தியா

நாக்பூர்: இளைஞரின் உடலில் இருந்த 18 செ.மீ. நீள வால் அறுவை சிகிச்சையில் அகற்றம்

நாக்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞனின் உடலின் பின்பகுதியில் வளர்ந்திருந்த 18 செ.மீ. நீளமுள்ள வால் பகுதியை, நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

Updated On : 4 அக்டோபர், 2016 at 2:46 PM
பகிர்:


நாக்பூர்: நாக்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞனின் உடலின் பின்பகுதியில் வளர்ந்திருந்த 18 செ.மீ. நீளமுள்ள வால் பகுதியை, நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

நாக்பூரில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட இந்த வால் பகுதியால், அந்த இளைஞருக்கு கடுமையான வலி ஏற்பட்டிருந்தது.

இந்த இளைஞர் பிறக்கும் போதே இந்த பிரச்னை இருந்துள்ளது. இது ஆரம்பத்திலே மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் எளிதாக அகற்றியிருக்கலாம். இது குறித்து மருத்துவமனைக்கு வர வெட்கப்பட்டுக் கொண்டு அவர்கள் விட்டுவிட்டனர்.

Advertisement

நாளடைவில் இந்த வால் பகுதி வளர்ந்து, வலியை ஏற்படுத்தியதால் மருத்துவமனைக்கு வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக மருத்துவர் பிரமோத் கிரி தெரிவித்தார்.

முதுகெலும்புடன் தொடர்புடைய இந்த வால் பகுதியில் எலும்பும் வளர்ந்திருந்ததால் இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையாகவே இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.