பறவைக் காய்ச்சல் பீதி எதிரொலி: தில்லி உயிரியல் பூங்கா மூடல்
பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக தில்லியில் உள்ள உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.
புது தில்லி: பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக தில்லியில் உள்ள உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.
இந்த உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 8 நீர் பறவைகள், சில வாத்துகள், பெலிகான் பறவைகளுக்கு அவியா எனப்படும் நோய் பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து உயிரியல் பூங்கா அதிகாரி கூறுகையில், பூங்காவில் உயிரிழந்த வாத்துகளின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகே முடிவுகள் எடுக்கப்படும். எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை உயிரியல் பூங்கா மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.
Advertisement