இந்தியா

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பழக்கம் பாஜகவுக்கு இல்லை: வெங்கய்ய நாயுடு

உத்தரப்பிரதேச அரசியல் நிலவரம் குறித்து கருத்துக் கூறிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பழக்கம் பாஜகாவுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

PTI


ஹைதராபாத்: உத்தரப்பிரதேச அரசியல் நிலவரம் குறித்து கருத்துக் கூறிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பழக்கம் பாஜகாவுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், உத்தரப்பிரதேச அரசியல் நிலவரத்துக்கு பாஜகவின் சதி காரணம் என்று கூறப்படுவது முற்றிலும் தவறானது.

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி அதன் உட்கட்சி பூசல் மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக சிக்கலில் உள்ளது. அக்கட்சியின் தலைவராலேயே பிரச்னையை தீர்த்து வைக்க முடியாத நிலையில் உள்ளது.

அவர்களாலேயே அவர்களது பிரச்னையை தீர்க்க முடியாத நிலையில், இதற்கெல்லாம் காரணம் பாஜக என்று எங்களை குற்றம்சாட்டுகிறார்கள். குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பழக்கம் பாஜகவுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீர் இட்லி, சாம்பார் போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்: டி.டி.வி. தினகரன்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

SCROLL FOR NEXT