இந்தியா

தலாய்லாமாவை அனுமதித்தால் பிரச்சினைதான்: இந்தியாவை மிரட்டும் சீனா!

DIN

பெய்ஜிங்: புத்தமத தலைவர் தலாய்லாமாவை அருணாசலபிரதேசத்தில் பயணம் செய்ய  அனுமதித்தால் இரு தரப்பு  உறவு கெட்டு விடும் என்று இந்தியாவை சீனா மிரட்டியுள்ளது.

திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய் லாமா திபெத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அருணாசலபிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.இந்த பயணத்திற்கு இந்திய அனுமதி அளித்துள்ளது.  இந்த நிலையில் தலாய் லாமாவின் பயணம் சீனாவை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்து சீன வெளி விவகாரத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ காங் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

தலாய் லாமா பயணம் பற்றிய தகவலால் நாங்கள் மிகவும் கவலை கொண்டு உள்ளோம். அவரை அருணாசலபிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய அனுமதித்தால் இந்தியா-சீனா நாடுகள் இடையேயான உறவு மிகவும் மோசம் அடையும். இரு நாடுகளின் சர்வதேச எல்லையோர பகுதிகளில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படும்

இந்தியா 14வது முறையாக அருணாசலபிரதேசத்தில் பயணம் செய்ய தலாய்லாமாவிற்கு அழைப்பு விடுத்து உள்ளது. தலாய்லாமாவின் அருணாசலபிரதேச பயணத்தை சீனா தீர்க்கமாக எதிர்க்கிறது

இவ்வாறு லூ காங் தெரிவித்தார்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT