இந்தியா

மீனவர் பிரச்சினை குறித்து இந்திய - இலங்கை அமைச்சர்கள் தில்லியில் பேச்சுவார்தை!

DIN

கொழும்பு: தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து புதுதில்லியில் வரும் 5-ஆம் தேதி இந்திய இலங்கை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்கி சிறை பிடிப்பதும், அவர்களது மீன்பிடி உபகரணங்கள்  மற்றும் படகுகளை  பறித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

நீண்ட காலமாக தொடரும் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு நாட்டு அரசுகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இரு நாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை, மந்திரிகளிடையே பேச்சுவார்த்தை என தொடர்ச்சியாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இலங்கை மீனவ பிரதிநிதிகள் குழு ஒன்று வருகிற 2–ந் தேதி அன்று தில்லி வருகிறது. அவர்கள் தமிழக மீனவர்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் பங்கேற்பதற்காக தமிழக மீனவ பிரதிநிதிகள் டெல்லி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதைத்தொடர்ந்து இரு நாட்டு அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை 5–ந் தேதி (சனிக்கிழமை) அன்று தில்லியில் நடக்க உள்ளது. இதில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா ஆகியா இருவருடன், மத்திய வெளியுறத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

கெளரவிப்பு...

SCROLL FOR NEXT