ஹரியானா முன்னாள் முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா வீட்டில் சிபிஐ சோதனை
ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புது தில்லி: ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புபீந்தர் சிங் ஹூடா மற்றும் யுபிஎஸ்சி அதிகாரிகள் வீடுகள் உட்பட 18 இடங்களில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.
குர்கான் பகுதியில் விவசாயிகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் ரூ.1,500 கோடி அளவுக்கு முறைகேடு நடந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இன்று 19 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.