முகப்பு
இந்தியா

காவிரி நீர் விவகாரம்: மாண்டியாவில் வழக்குரைஞர்கள் போராட்டம்

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On : 6 செப்டம்பர், 2016 at 1:18 PM
பகிர்:

மாண்டியா: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்ததையடுத்து இரு மாநிலங்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகின்றது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இரு மாநில எல்லையான சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாண்டியாவில் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.