முகப்பு
இந்தியா

ஸ்ரீநகரில் ஊரடங்கு தளர்வு: உயிரிழப்பு 72 ஆக உயர்வு

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், நிலைமை ஓரளவுக்கு சீரடைந்ததை அடுத்து, அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டுள்ளது.

Updated On : 6 செப்டம்பர், 2016 at 12:38 PM
பகிர்:


ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், நிலைமை ஓரளவுக்கு சீரடைந்ததை அடுத்து, அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் சிக்கி காயமடைந்த இளைஞர் ஒருவர் பலியானதை அடுத்து, கடந்த 59 நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீநகரில் இன்று உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இதனால், காஷ்மீரில் எந்த பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.