பந்த் எதிரொலி: பெங்களூரு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு
கர்நாடக மாநிலத்தில் நடந்து வரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடந்து வரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை எதிர்த்து கர்நாடகாவில் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று அரசு போக்குவரத்தும், தனியார் வாகனங்களும் இயக்கப்படாததால், வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த பயணிகள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வாகனம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.