முகப்பு
இந்தியா

பக்ரீத் பண்டிகை: களைகட்டாத காஷ்மீர் சந்தைகள்

காஷ்மீரின் சந்தைப் பகுதிகளில் வழக்கமான பக்ரீத் பண்டிகை முன்னேற்பாடுகள் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது.

Updated On : 12 செப்டம்பர், 2016 at 2:54 PM
பகிர்:


ஸ்ரீநகர் : காஷ்மீரின் சந்தைப் பகுதிகளில் வழக்கமான பக்ரீத் பண்டிகை முன்னேற்பாடுகள் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது.

காஷ்மீரில் வன்முறை காரணமாக ஒரு மாதத்துக்கும் மேல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்ததால், பொது மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடங்கவே சில காலம் பிடிக்கும் நிலை உள்ளது.

பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பதால் பல இடங்களில் கடைகள், அலுவலகங்கள் மூடியே உள்ளன.

Advertisement

சில சாலைகளில் மட்டும் தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் இனிப்புக் கடைகள், துணிக் கடைகள் எல்லாம் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.