இந்தியா

பெங்களூருவில் 50 தனியார் பேருந்துகளுக்கு தீ வைப்பு 

DIN

காவிரி பிரச்னை தலை தூக்கியுள்ள நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனைத்தொடர்ந்து, கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானதில் இருந்து அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

தமிழர்களையும் தமிழக வாகனங்களையும் தாக்கி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை  தமிழர்களின் வாகனங்கள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டன.

தமிழகத்தை சேர்ந்த 50 தனியார் வாகனங்கள்  தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. பணிமனையில் நின்ற பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு தீ வைத்து வருகின்றனர். இதனால் அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT