பிரபல யோக குரு ராம்தேவ் இப்பொழுது அதிரடியாக ஆடை தயாரிப்பு தொழிலில் களமிறங்க உள்ளார். விரைவில் உள்நாட்டு தயாரிப்பான ஜீன்சுகள் தயாரிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவ். இவர் ஏற்கனவே 'பதஞ்சலி' என்ற பெயரில் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் களமிறங்கி கணிசமான லாபத்தையும் ஈட்டியுள்ளார். இந்நிலையில் அடுத்த கட்டமாக ஜீன்ஸ், பெண்கள் உடைகள் மற்றும் அலுவலக உடைகள் தயாரிப்பு தொழிலில் கால் பதிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாதவது;
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடைகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். பாரம்பரியமிக்க உடைகள் மட்டும் அல்ல, ஜீன்ஸ் உள்ளிட்ட நவீன உடைகளையும் தயாரிக்கும் திட்டமுள்ளது. அதனை நாம் 'உள்நாட்டு ஜீன்ஸ்' என்று கூட அழைக்கலாம்.
தங்கள் துணி வகைகளுக்கென 'பரிதன்' என்ற தனியான பிராண்ட் கொண்டுள்ள ராம்தேவ், பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்காவில் தொழிற்சாலைகள் கட்ட திட்டமுள்ளது என்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் தொழிலை விஸ்தீகரிக்கும் எண்ணமும் உள்ளது என்றும் அவர் பேட்டியில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.