முகப்பு
இந்தியா

பெங்களூருவில் ஊரடங்குக்கு இடையே பக்ரீத், ஓணம் கொண்டாட்டம்

காவிரி நதிநீர் விவகாரத்தில் கன்னட அமைப்பினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைத் தொடர்ந்து பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 செப்டம்பர், 2016 at 12:56 PM
பகிர்:


பெங்களூரு: காவிரி நதிநீர் விவகாரத்தில் கன்னட அமைப்பினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைத் தொடர்ந்து பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் மீதான தாக்குதலைத் தடுக்க பெங்களூருவின் சில முக்கியப் பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அங்கு நிலைமை ஓரளவுக்கு சீரடைந்தது.

இந்த நிலையில், இஸ்லாமிய பெருமக்கள் இன்று பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். சாலைகளில் வழக்கமான கூட்டம் இல்லாமல் இருந்தாலும், மசூதிகளில் வழக்கமான கூட்டம் காணப்பட்டது.

சில பதற்றமான மசூதிகளுக்கு அருகே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முக்கிய கடை வீதிகள் மூடியுள்ளன. பிஎம்டிசி மற்றும் கேஎஸ்ஆர்டிசி பேருந்து சேவைகள் இன்னும் சீரடையவில்லை.

சில பகுதிகளில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.