இந்தியா

டெங்கு, சிக்கன்குனியா நோய்க்கு மக்கள் பீதியடைய வேண்டாம்: ஜேபி நட்டா தகவல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

DIN

புது தில்லி: தலைநகரில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா நோய்க்கு பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

தில்லியில் சிக்கன்குனியா மற்றும் டெங்கு நோயால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சிக்கன்குனியா நோய் பற்றி மக்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. நிலைமையைச் சமாளிக்கும் வகையில் தில்லியில் உள்ள அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

கங்கா ராம் மருத்துவமனையில் சிக்கன்குனியா நோய்க்கு இதுவரை ஐந்து பேர் பலியானதாக டாக்டர் ஆர்.எஸ்.ரத்னா கூறியுள்ளார். சிக்கன்குனியா ஒன்றும் உயிர்க்கொல்லி நோய் அல்ல. மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள், பணியாளர்களுக்குப் பயிற்சி, மருத்துவ உபகரணங்கள் ஆகியவை தொடர்பாகவும் அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இதனால் யாரும் இந்நோய்கள் குறித்துப் பயப்படத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுநேத்ரா பவாருடன் என்சிபி தலைவர்கள் சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸை இணைக்க அஜித் பவார் விரும்பினாரா? - சரத் பவார் பதில்!

234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை முதல் பரப்புரை!

“எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை” - முதல்வர் மு . க. ஸ்டாலின்!

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

SCROLL FOR NEXT