இந்தியா

நடத்தையில் சந்தேகம்: மனைவியின் மூக்கை நறுக்கிய கணவன்!

தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் அவரது மூக்கை நறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் அவரது மூக்கை நறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் நரோதா ஹன்ஸ்ராம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் ரத்தோர். இவரது மனைவியை கம்லேஷ். திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகி விட்ட இந்த தம்பதிக்கு ஆறு வயதில் பெண்  குழந்தை ஒன்று உள்ளது. 

சமபத்தன்று சஞ்சீவ் வேலை முடிந்து குடித்து விட்டு வீட்டுக்குத் திருமபிய பொழுது, கம்லேஷ்  வேறு யாரோ ஒரு ஆணுடன் அலை பேசியில்  பேசிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ் கம்லேஷுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

முடிவில் காமலேஷின் அழகை குலைக்கும் பொருட்டு, தன்னுடைய மனைவியின் மூக்கு நுனியை கத்தியால் நறுக்கி விட்டு அவர் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து கம்லேஷின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். சஞ்சீவை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT