உரி தாக்குதலில் பலியான 3 பிகார் வீரர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: நிதிஷ் அறிவிப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பிகாரைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார
பாட்னா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பிகாரைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 3 ராணுவ வீரர்களுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என்றும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
மேலும், நேற்று உரி பகுதியில் நடந்த தாக்குதலில் பலியான 17 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement