இந்தியா

செல்ஃபி எடுக்கும் பொழுது ஏரிக்குள் தவறி விழுந்த மாணவி: காப்பாற்றச் சென்ற நண்பர்கள் பலி !

ஆந்திராவில் செல்ஃபி எடுக்கும் பொழுது ஏரியில் தவறி  விழுந்த தோழியை காப்பாற்ற முயன்ற ஐந்து பேர் நீரில்   மூழ்கி பலியானர்கள்.

DIN

ஆந்திராவில் செல்ஃபி எடுக்கும் பொழுது ஏரியில் தவறி  விழுந்த தோழியை காப்பாற்ற முயன்ற ஐந்து பேர் நீரில்   மூழ்கி பலியானர்கள்.

இது பற்றி கூறப்படுவதாவது:

தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல்  மாவட்டத்தைச் சேர்ந்த வாகதேவி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் அருகில் உள்ள தர்மசாகர் ஏரிக்கு பயணம் சென்றனர்.  அப்பொழுது அவர்களில் ஒரு மாணவியான ரம்யா பிரதியூஷா, செல்ஃபி எடுக்க முயன்ற பொழுது எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்தார்.

அவரது கதறலைக் கேட்டு அவரது நண்பர்கள் ஐந்து பேர் அவரைக்  காப்பற்றும் பொருட்டு ஏரியில் குதித்தனர். ரம்யா எப்படியோ தபபி கரை ஏறி விட்ட நிலையில், அவரது நண்பர்கள் ஐந்து பேரும்  நீரில்  பரிதாபமாக மூழ்கி இறந்தனர்.

இறந்தவர்களில் மூன்று பேர்  ஆண்கள்; இரண்டு பேர் பெண்களாவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலுவை வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும்: கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

வண்ணாா்பேட்டை பல்பொருள் அங்காடி மின்தூக்கியில் சிக்கிய 5 போ் மீட்பு

நெல்லையில் ஆண் சடலம் மீட்பு

பாளை.யில் நூல் அறிமுக விழா

முன்னாள் படை வீரா்கள் நலத்துறை சாா்பில் தையல் இயந்திரம் விநியோகம்

SCROLL FOR NEXT