இந்தியா

தேசிய பூங்காவாக மாறுகிறது திருப்பதி உயிரியல் பூங்கா

DIN

திருப்பதி உயிரியல் பூங்காவை, தேசிய பூங்காவாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

திருப்பதியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா 298 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சர்க்கஸ் கூடாரங்களிலிருந்து மீட்கப்பட்ட சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட விலங்குகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மிகவும் அரிதான வெள்ளைப் புலிகளும் இங்கு உள்ளன. எனினும், இங்கு குறைந்த எண்ணிக்கையிலான விலங்குகளே பராமரிக்கப்படுவதால், மத்திய அரசின் உதவித்தொகையும் குறைவாகவே கிடைத்து வருகிறது. அதனால் மண்டல அளவிலான இந்தப் பூங்காவை, தேசிய பூங்காவாக தரம் உயர்த்த அதிகாரிகள் புதிய திட்டத்தை வகுத்துள்ளனர்.

இதற்காக, ரூ. 32 லட்சம் செலவில் பூங்காவின் பரப்பளவை 1,200 ஹெக்டேராக விரிவுபடுத்த உள்ளனர்.

மேலும், மற்ற உயிரியல் பூங்காக்களிலிருந்து பரிமாற்ற முறையில் விலங்குகளை திருப்பதி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வர உள்ளனர்.

அதன்படி, அசாம் வனத்துறை சார்பில் திருப்பதிக்கு கண்டாமிருகத்தை கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, பூங்காவில் ஆய்வு செய்வதற்காக, மத்திய பூங்கா ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் திருப்பதிக்கு வரவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT