இந்தியா

பிரதமருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு

DIN

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக், விமானப் படை தலைமைத் தளபதி அரூப் ராஹா, கடற்படை துணை தலைமைத் தளபதி அட்மிரல் கே.பி.சிங் ஆகியோர் சந்தித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது. எனினும், பிரதமருடனான இந்தச் சந்திப்பு வழக்கமானதே என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
முப்படைத் தளபதிகளுடன் ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சந்திப்பு நடைபெறுவது வழக்கம். அப்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெறும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா சில காரணங்களால் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
முன்னதாக, உரி தாக்குதலுக்குப் பிறகு ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங், பிரதமரையும், பிரதமர் அலுவலக அதிகாரிகளையும் அவ்வப்போது சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தையொட்டி
நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT